தலைப்பிலே கவனம் ஈர்த்த படம் திரையில் கவனம் ஈர்த்ததா?
ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான உடன்பால் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது
தாயின் நினைவு நாளுக்கு கூடும் உறவுகள் தங்கள் சுயநலத்திற்காக தந்தையின் பிணத்தை வைத்து ஆடுபுலி ஆட்டம் தான் கதை. உறவுகளை போற்றிப் பாதுகாக்கச் சொல்லும் படங்களுக்கு மத்தியில், உறவுகளின் அன்பை நிர்ணயிக்கவே இங்கு பணம் தேவைப்படுகிறது என்ற எதார்த்தத்தைப் பேசுகிறது படம்
நடிகர் சார்லி தன் அனுபவத்தை மூலதனமாக கொண்டு நடிப்பில் அசத்தியிருக்கிறார். விவேக் பிரசன்னா,காயத்ரி உள்ளிட்ட நடிகர்கள் யாவரும் அடிப்பொலி நடிப்பு
இப்படியான சிறு படங்களை இசையால் பெரிதாக நிரப்ப முடியாது என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவும் மிகைத்தன்மையின்றி படத்தை நகர்த்த உதவுகிறது.
மிக இன்ட்ரஸ்டிங்கான கதையைப் பிடித்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் சில சிறப்புகளைச் சேர்த்திருந்தால் படம் பட்டாசாக இருந்திருக்கும். சில குறைகளைப் பொறுத்துக் கொண்டு படத்தைப் பார்த்தால் நிச்சயமாக ஒரு டிபரெண்ட் Feel கிடைக்கும்
2.75./5
-மு.ஜெகன் கவிராஜ்