Tamil Movie Ads News and Videos Portal

தல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு

டிவிட்டர் டிரெண்டிங்கில் தமிழ்நாடு அளவைப் பொறுத்தவரைக்கும் வைரல் ஆகும் ஹேஷ்டேக்குகள் பெரும்பாலும் தல அஜீத்குமார் மற்றும் தளபதி விஜய் இருவரின் ரசிகர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியிடும் பதிவுகள் தான் என்றால் அது மிகையில்லை. இரு நடிகர்களின் படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு புதிய தகவல்களையுமே இரு தரப்பு ரசிகர்களும் வைரலாக்கத் தவறுவதில்லை. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் டிவிட்டரில் இருப்பதால் இவர்களின் ரசிகர்கள் எளிதாக இவர்களை பாலோ செய்கிறார்கள்.

ஆனால் விஜய், அஜீத்குமார் இருவருமே டிவிட்டரில் இன்னும் இணையவில்லை. நடிகர் விஜய்க்கு அலுவலகம் தொடர்பான டிவிட்டர் கணக்கு மட்டுமே உள்ளது. நடிகர் அஜீத்குமாருக்கோ அதுவும் இல்லை. இந்த நிலையில் “டிவிட்டர் இந்தியா” சார்பில் நடிகர் அஜீத்குமாருக்கு டிவிட்டரில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உங்களின் ரசிகர்கள் எந்தளவிற்கு உங்களின் படத்தை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள். பொது நிகழ்ச்சிகள், பட விழாக்கள், பட புரோமோஷன்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வெகுகாலமாகவே நடிகர் அஜீத்குமார் தவிர்த்து வருகிறார். இப்பொழுது டிவிட்டர் இந்தியா சார்பில் விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்று, அவர் டிவிட்டரில் இணைவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.