சீரியஸ் அமீரை சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டுமா? உயிர் தமிழுக்கு டிக்கெட் புக் பண்ணுங்க😍😍
தேர்தலில் போட்டியிடும் பெண் மீது காதல் வருது ஹீரோ அமீருக்கு. ஆக்ஷுவலா படத்தில் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் காதலில் ஜெயிக்கும் சூழல் வர..பின் ஒரு கொலையால் காதலியை தேர்தலில் எதிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. காதல், மோதல் மற்றும் தேர்தல் களத்தில் அமீரை வைத்து இயக்குநர் ஆதம்பாவா சொல்வது என்ன என்பதே மிச்சக்கதை.. சில மிக்சர் கதையும் இதில் உண்டு
எங்கய்யா எங்க வட சென்னை ராஜன? என யாராவது அமீரைத் தேடினால் அமீர் ரூபத்தில் இப்படத்தில் இருக்கும் பாண்டி உங்களைப் பார்த்து நக்கலாகச் சிரிப்பார். யெஸ் அமீர் இப்படத்தில் சட்டையர் செய்யும் கேரக்டரில் வருகிறார்..அவருக்கு அது நன்றாகவும் வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருந்த படம் என்பதால் நடிகர்களின் உடல் கண்டினியூட்டியில் சில கன்பியூன்ஸ் தெரியத்தான் செய்கிறது. ஆனால் படத்தின் கலகல ஓட்டம் அதைக் கவர் செய்துமூடிவிடுகிறது. சாந்தினி, ஆனந்த் ராஜ், இமான் அண்ணாச்சி உள்பட படத்தில் தோன்றும் யாவரும் நன்றாக நடித்துள்ளனர்
வித்யாசாகர் இசையில் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் ஒரு பாடல் அட்டகாசம். பின்னணி இசையில் சாகர் சாகசம் நிகழ்த்தியுள்ளார். அவுட்டேடட் ஷாட்ஸ் என படத்தில் எதுவும் இல்லை. ஓரளவு பிரஷ் ஆன சினிமாட்டோகிராபி உள்ளது படத்தில். படத்தை எடிட்டர் பைனல் பண்ணி பைனல் பண்ணி ரீ எடிட் செய்திருப்பார் போல
படத்தின் உள்ளடக்கம், வெளிப்படுத்தப்பட்ட ஆக்கம் ஆகியவற்றைப் பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பொதுவெளியில் காத்திரமாகவும் கொஞ்சம் காட்டமாகவும் சுற்றும் அமீரை, நக்கல் நய்யாண்டியோடு காண்பதற்காகவே இந்த உயிர் தமிழை கொண்டாடலாம்
-மு.ஜெகன் கவிராஜ்
(இந்தப் படத்தைப் பார்க்கும் முன் SS music யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ள அமீரின் நேர்காணலைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். அந்த நேர்காணலில், அரசியல், நட்பு,உறவு,சினிமா, காதல், காவல், ஆன்மிகம் என பலவற்றை அமீர் இதுவரை நாம் பார்த்திராத கோணத்தில் பேசியுள்ளார். அப்படித்தான் உயிர் தமிழுக்கு படம் பற்றியும் பேசியுள்ளார்)