ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சில மர்ம முடிச்சுகளையும் போட்டு கம்பேக் கொடுத்திருக்கிறார் வசந்தபாலன்
ஒரு ஊழல் வழக்கில் முதல்வர் சிக்கும் சூழல். முதல்வர் சிக்கிவிட்டால் அந்த இடத்திற்கு தான் வர வேண்டும் என சதி திட்டம் தீட்டும் முதல்வரின் மகள். முதல்வரோடு நட்பில் இருக்கும் ஒரு பெண் பத்திரிகையாளர் நகர்த்தும் சில சாணக்கியத் தனங்கள். வடஇந்தியாவில் 5 பேரை கொலை செய்துவிட்டு தப்பி வந்த பெண்ணைத் தேடும் படலம் ஒரு பக்கம். இவை மொத்தமும் எப்படி ஒரு கதைக்குள் குவிகிறது என்பதை அழகான திரைக்கதை ஆக்கியுள்ளார் வசந்தபாலன்
முதல்வராக தன் முதிர்ச்சியான நடிப்பால் அடித்து ஆடியுள்ளார் கிஷோர். முதல்வர் மகளாக ரம்யா நம்பீசன் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் அட போட வைக்கிறது. சந்தான பாரதி கவிதா பாரதி இருவரும் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர். ஸ்ரேயா ரெட்டி காட்டியிருக்கும் அபாரமான நடிப்பு இந்த வெப்சீரிஸுக்கு மிகப்பெரிய பலம். நடிகர் பரத் சின்னச் சின்ன காட்சிகளிலும் அதிக கவனம் எடுத்து நடித்துள்ளார்
சீரிஸின் சீரியசான கதை நகர்வுக்கு ஏற்றாப்போல பின்னணி இசையை வழங்கியுள்ளார் ஜிப்ரான். கூடுதல் பின்னணி இசை சைமன்.கே கிங். வாழ்த்துகள். வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவில் எல்லா ஆங்கிள்ஸும் சபாஷ் போட வைக்கிறது. எடிட்டரும் நேர்த்தியாக உழைத்துள்ளார்
வசந்தபாலன் இந்த சீரிஸில் ஆடியிருப்பது அரசியல் ஆட்டம். வசனங்களில் அதகளம் செய்துள்ளார். நிறைய டீடெய்லிங் வொர்க்-ஐ திரைக்கதையில் தந்துள்ளார். அதனால் இந்த சீரிஸ் பார்க்கும் போது நமக்குள் கனெக்ட் ஆகிவிடுகிறது. சிலபல குறைகள் பலவீனமாக தெரிந்தாலும், நிறைய பலங்களும் இருப்பதால் தலைமை செயலகம் நம்மை ஈர்க்கிறது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்