இயக்குநர் பார்த்திபனின் படங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஏதோவொரு விதத்தில் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். ஆனால் அது போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் கிடைத்தது இல்லை. அந்த வரலாற்றை ஒற்றை ஆளாக அவர் நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7 படம் மாற்றிக் காட்டியது. பல சாதனைகளைப் படைத்ததோடு மக்களின்
உள்ளத்தை வென்ற ’ஒத்த செருப்பு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ஆர்.பார்த்திபன் தனது அடுத்தபடத்தை தொடங்கவிருக்கிறார். இப்படத்திற்கு “இரவின் நிழல்” என்று கவித்துவமாக பெயர் சூட்டியிருக்கிறார். இப்படம் குறித்துப் பேசிய அவர், “இப்படத்தில் என்னோடு இன்னும் பலரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவிருக்கிறேன். ஆசியப்படங்களில் இதுபோன்ற முயற்சியில் எந்தப் படமும் எடுக்கப்பட்டது கிடையாது.” என்று கூறினார்.