”பாகுபலி” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் உலகளவில் முக்கியமான இயக்குநராக மாறியவர் இயக்குநர் இராஜமவுலி. இவரின் அடுத்த படம் எப்பொழுது வெளியாகும் என்று உலகின் ஒவ்வொரு மூலையிலுள்ள ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா என இரண்டு கதாநாயகர்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே தொடங்கியது. படம் 2020 ஜூன்
மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா இருவரும் சிறிய விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் அறிவித்தபடி இப்படம் 2020ல் வெளியாகுமா..? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் படம் 2020ல் வெளியாகும் என்பதை உறுதிபடுத்தியிருக்கின்றனர். மேலும் இப்படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் அலியாபட் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.