Tamil Movie Ads News and Videos Portal

ஆக்டர் ஜீவா பர்த் டே. ஓர் அட்டகாச பகிர்வு

தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் என்பது நமக்கு தெரியும்.

ஜீவா நடித்த முதல் படம் அந்த அளவிற்கு ஒன்றும் வெற்றி பெறவில்லை. ஆனால், இவர் அமீர் இயக்கத்தில் நடித்த ‘ராம்’ படம் இவருக்கு ஒரு திருப்புமுனை ‘ராம்’ அமைந்தது என்றும் கூறலாம்.

 

அதற்கு பின்னர்’டிஷ்ஷும், ஈ, கற்றது தமிழ்’ போன்ற படங்களில் வித்யாசமான கத்தபத்திரங்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து நடித்து வந்த ஜீவா பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதை கைவிடுத்து வழக்கமான கமர்சியல் படங்களில் இறங்கி விட்டார். அதனால்,இவரது மவுசு கொஞ்சம் இறங்கிடுச்சு.

2007ல்,சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.