Tamil Movie Ads News and Videos Portal

தளபதி67 படத்திற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்கள்?

விஜய் மட்டும் என்றாலே அது பெரியபடம் தான். கூடவே சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனென், திரிஷா என பெரும் பட்டாளமே களம் இறங்குகிறது. அப்படின்னா பட்ஜெட் எப்படி எகிறும்!

ஏன் இவ்ளோ செலவு செய்கிறது தயாரிப்பு நிறுவனம்?

தொட்டதெல்லாம் ஹிட்டு..ஹிட்டெல்லாம் துட்டுன்னு ட்ராவல் பண்ற ஒரே ஹீரோ தமிழ்சினிமாவில் விஜய் மட்டும் தான் என்பது கன்பார்ம்டு.. சமீபத்தில் வெளியான வாரிசு படத்தை விமர்சகர்கள் வச்சு செய்தாலும் வசூலில் படம் பிச்சு எறிந்தது. வாரிசை டிஸ்ட்யூபூட் செய்தது செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தான். இந்த ஒரு காரணம் போதாதா..தளபதி67 படத்திற்கு இஷ்டம் அள்ளி செலவு செய்ய!

அப்புறம் லாஸ்ல இருந்த செவன் ஸ்கிரீன்ஸை மாஸ் காட்டி நிப்பாட்டியது நம்ம மாஸ்டர் படம் தானே! So தளபதி67க்கு பணத்தை வாரி இறைப்பார்கள். நிச்சயமாக அது வாரிக்கொடுக்கும்.