Tamil Movie Ads News and Videos Portal

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை சரியான முறையில் ஊக்குவித்து வாய்ப்பளிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. பிரியா மாலி இசையமைத்துப் பாடிய ‘துளி தீ’ ஆல்பம், யு டியூப் சேனல் மற்றும் இதர இசைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பன்முகத் திறமை மிக்க பிரியா மாலி பாடலுக்கு இசையமைத்து பாடியதுடன் நடித்திருப்பது, வெகுவான பாராட்டுதல்களை குவித்து வருகிறது. செவிக்கினிய குரல் வளத்துடன், கண்களைக் கவரும் விதத்தில் தோன்றியதற்காக கிடைத்து வரும் அபரிமிதமான பாராட்டு மழையால் பிரியா மாலி அகம் மகிழ்ந்து வருகிறார்.
இது குறித்து விவரித்த பிரியா மாலி, ஆத்மார்ந்தமான அன்பைக் கொண்டாடுவது என்பதுதான் இந்த இசை ஆல்பத்தின் அடிப்படை. எளிமையாகவும் அமைதியாகவும் நான் கட்டமைக்க நினைத்த இந்த ஆல்பத்தை தொழில் நுட்பக் குழுவினர், சிறந்த பின்னணிக் காட்சிகளுடன் கண்கவரும் விதத்தில் உருவாக்கியிருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா சார் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு இந்த ஆல்பத்தை அர்பணிக்கிறேன். இந்த ஆல்பம் உருவாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும், குறிப்பாக பாடலை எழுதிய எனது தந்தை வி.ஆர்.மாலி அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புதிய திறமைசாலிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இசைத் தொழிலை செதுக்கி வருகிறது யு-1 ரெக்கார்ட்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களைத் தவிர, பிற திரைப்படப் பாடல்களையும், சுயாதீன பாடல்களையும் யு-1 நிறுவனம் வெளியிட இருக்கிறது