Tamil Movie Ads News and Videos Portal

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’!

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.. இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம்கார்த்திக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.