Tamil Movie Ads News and Videos Portal

”அதைக் கலைக்கண்ணோடு பார்க்க வேண்டும்” – ராஸி கண்ணா

‘இமைக்கா நொடிகள்’ ‘அயோக்யா’ போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் ராஸி கண்ணா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடித்திருக்கும் “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்” என்கின்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் ராஸி கண்ணா, கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட நான்கு நாயகிகள் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு காட்சியில் ராஸி கண்ணா நிர்வாணமாக குளித்தபடி நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் உதடுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் இதுகுறித்துப் பேசிய ராஸி கண்ணா, “அந்தக் காட்சி கதைக்கு மிகவும் தேவைப்பட்ட காட்சி, அதைக் கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும். படத்தில் எந்த மாதிரியான சூழலில் அக்காட்சி இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்..” என்று கூறி உள்ளார்.