Tamil Movie Ads News and Videos Portal

”உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது” – ஆர்யா

2005ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஆர்யா, இன்று வரை தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வருகின்றார். ‘நான் கடவுள்’, மதராசப்பட்டிணம், ‘அவன் இவன்’ ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் வெற்றிபெற்று ஆர்யாவின் நடிப்பும் பாராட்டப்பட்டாலும் கூட, இன்னும் அவருக்கான இடம் என்பது தமிழில் நிலையில்லாத தன்மையில் தான் இருந்து வருகிறது. தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் “சல்பேட்டா” திரைப்படம் தனக்கான நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார் ஆர்யா.

வடசென்னை சார்ந்த குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகவுள்ள இப்படத்திற்காக மூன்று மாத காலம் உடற்பயிற்சி செய்து, தன் உடலினை மெருகேற்றி வந்த ஆர்யா, தற்போது கட்டுமஸ்தானதாக மாறி இருக்கும் தன் உடலின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் “உங்களை வலிமையாக்கிக் கொள்வது தான் உங்களுக்குள்ள ஒரே வாய்ப்பு. நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்குத் தெரியாது..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு படம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகவிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.