Tamil Movie Ads News and Videos Portal

யசோதா – விமர்சனம்

பெண் சார்ந்த கதைகளின் வலிமையை உணர்ந்து யசோதா கதையை உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி&ஹரிஷ்

வாடகைத் தாயாக இருக்க விருப்பம் தெரிவித்து யசோதாவான சமந்தா ஒரு பெரிய டீமிற்குள் செல்கிறார். அங்கு நிறைய பெண்கள் குடும்பச் சூழ்நிலையால் வாடகைத்தாயாக இருக்கிறார்கள். அதுவொரு தனி உலகமாக இயங்கி வருகிறது. உன்னி முகுந்தன், வரலெட்சுமி இதன் பின்னணியிலும் முன்னணியிலும் இருக்கிறார்கள். அங்குள்ள வாடகைத் தாய் பொறுப்பேற்றுள்ள பெண்கள் அனைவரும் கர்ப்ப காலத்தை எதிர்நோக்கி இருக்கையில், சம்ந்தா அங்கு வேறோர் ரூட் பிடிக்கிறார். மேலும் கர்ப்ப ஸ்திரீகளை வைத்து அங்கு ஆடப்படும் மரண விபரீதத்தை சமந்தா காண்கிறார். அடுத்தடுத்து என்ன என்பதையும், தனியாக சம்பத் தலைமையில் நடக்கும் இன்னொரு இன்வெஸ்டிகேசன் எபிசோடும் ஒன்றாக இணைந்து எப்படியான முடிவை எட்டுகிறது என்பதே யசோதா கதை

மூன்று மாதக்குழந்தையை வயிற்றில் சுமந்துள்ள தாயாக நடித்து, ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியுள்ளார் நடிகை சமந்தா. அட்டகாசமான ஆக்டிங். குறிப்பாக ஆக்‌ஷனிலும் அதிரடி காட்டியுள்ளார். வரலெட்சுமி உன்னி முகுந்தன் இருவரும் அவர்களுக்கான கேரக்டரில் சற்று ஓவர் ஆக்டிங் காட்டியுள்ளார்கள். சம்பத்தும் அவரது டீமும் கொடுத்துள்ள நடிப்பு வெரி நைஸ்

M.சுகுமாரின் கேமரா கலர்புஃல் & எதார்த்தயியல் என Two way-லும் அழகாக பயணித்துள்ளது. மணிசர்மாவின் இசையில் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே அருமை ரகம். சாம்.சி எஸ் பத்திரிகையாளரும் நடிகருமான செந்தில் குமரன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். நல்ல வரிகள்

தேவகி பெற்ற பகவான் கிருஷ்ணனை கம்சனுக்குத் தெரியாமல் யசோதா வளர்ப்பார் என்பது புராணம். இந்தப்படத்தில் இளம்பெண்களை பணம் கொடுத்து வாடகைத் தாய்க்கு சம்மதிக்க வைத்து, அவர்களுக்குப் பிறக்கும் சிசுக்களை வைத்து பிஸ்னெஸ் செய்யும் கும்பல் கம்சனாக இருக்கிறது. அவர்களை வீழ்த்த யசோதாவே கிருஷ்ணாவதாரம் எடுத்தது போல சம்ந்தா கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமந்தாவின் கேரக்டர் டிசைன் அபாரம். வில்லன் டீம் கேரக்டரும் காத்திரமாக வார்க்கப்பட்டிருந்தால் படம் இன்னும் நம்மை உள்ளிழுத்திருக்கும். முன்பாதியில் நமக்குள் பதட்டத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய திரைக்கதை பின்பாதியில் சற்று இடறி விட்டது. டீடெய்லிங் வேலையில் காட்டியுள்ள திறமையை திரைக்கதை பக்கமும் மடைமாற்றியிருந்தால் யசோதா ஏகபோகமாக கவர்ந்திருப்பாள்.
இருப்பினும் இந்த யசோதா காலத்தின் தேவை

3/5
-மு.ஜெகன் கவிராஜ்