இன்று வெளியாக இருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ட்ரைய்லர் காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களின் அட்லிரின் சுரப்பை அதிகரிக்கும் வகையிலான மிரட்டலான காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் இந்தியில் வருண் தவாண் வெளியிடுகின்றனர்.
‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தா வாடகைத்தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமந்தாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து, உன்னி முகுந்தன் மற்றும் சமந்தாவுக்கு இடையிலான காதல் காட்சிகள் கதையை இலகுவாக்கும். நடிகை வரலக்ஷ்மி கதையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடியான ஆக்ஷன் கதைக்கு தனது இசை மூலம் கதையின் பரபரப்பை இன்னும் அடுத்த நிலைக்கு இசையமைப்பாளர் மணிஷர்மா எடுத்து சென்றுள்ளார்.
சமந்தா தவிர்த்து நடிகர்கள் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ப்ரிடா, ப்ரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#Yashoda #யசோதா