’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘கூர்கா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடிக்கும் “ராஜபீமா”
படத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பேசும் போது, “ராஜபீமா படம் யானைத் தந்தங்களை வேட்டையாடி கடத்தும் கும்பலைப் பற்றியக் கதை. இப்படத்தில் நான் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். ஹீரோவுடன் இணைந்து தந்தங்களைக் கடத்தும் கும்பலைப் பிடிக்க உதவும் என் கதாபாத்திரம் படத்தில் திருப்புமுனை கதாபாத்திரமாக இருக்கும். ” என்று தெரிவித்தார்.