இந்தாண்டு விஜய்சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஜனநாதன் இயக்கத்தில் “லாபம்”, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்”, வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் “கடைசி விவசாயி” சீனு இராமசாமி
இயக்கத்தில் ‘மாமனிதன்’ போன்ற படங்கள் இந்தாண்டு வெளியாகவிருக்கிறது. இதில் ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் விஜய் சேதுபதியின் தோற்றம் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது ஜனவரி 16 விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்..