Tamil Movie Ads News and Videos Portal

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் படம்!

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்ப்பையும் பெற்றது.

தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.