நடிகர்களில் அதிகப்படியான சர்ச்சைகளில் சமீப காலத்தில் சிக்கியவர் என்றால் அது நடிகர் சிம்பு தான். அவர் தற்போது பெரும் பிரச்சனைக்குப் பின்னர் நடித்து வரும் “மாநாடு” படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி சிம்பு மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு சிம்புவின் நடவடிக்கைகள் தமிழ் சினிமாவின் பேசு பொருள். அது போல் இயக்குநர்கள் வரிசையில் மிஷ்கின் சற்றே வித்தியாசமானவர்.
தான் நினைத்த விசயத்தை அடைந்தே தீர வேண்டும் என்கின்ற கொள்கைப் பிடிப்பு மிக்கவர். மேலும் எக்காரணத்திற்காகவும் தன் கதைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். சமீபத்தில் “துப்பறிவாளன் 2” படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்கின்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி வெளியானதில் இருந்து இருவருக்கும் ஒத்து வருமா..? இந்தக் கூட்டணி கரை சேருமா..? என்ற கேள்வியே பிரதானமாக எழுந்துள்ளது. மேலும் இப்படத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளார் என்பது உபரித் தகவல்.