விஜய் மேல் ஏன் இவ்வளவு வன்மம்? சில ஊடகங்களுக்கு ரசிகனின் கேள்வி
சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் சாதனைப் படைத்த படம் விஜய் அட்லீ கூட்டணியில் உருவான பிகில். இப்படத்தோடு வெளியான கார்த்தியின் கைதி படம் விமர்சனங்கள் மற்றும் வசூலில் நல்ல முன்னேற்றதை எட்டியது. இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் “சில ஊடகங்கள் கைதி படத்தைப் பாராட்டுகிறோம் என்ற பெயரில் பிகில் படத்தை மிகவும் மட்டமாக விமர்சிக்கிறார்கள்” என்று வருத்தப்பட்டார். மேலும் தமிழ்சினிமாவில் முதல்முறையாக ₹200 கோடி பிஸ்னெஸ் மற்றும் வசூல் என்ற இலக்கை விஜய் தொட்டிருக்கிறார். அதைப் பாராட்ட யாருக்கும் மனசில்லை என்பதைப் பார்க்கும் போது ஏன் இவர்களுக்கு விஜய் மீது எவ்வளவு வன்மம் என்றே தோன்றுகிறது” என்றார் சற்று ஆதங்கத்துடன்.