எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? பப்ளிக் ஸ்டாரை வாழ்த்திய விமல்
“பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்” மற்றும் “திருமுருகன்” இருவரும் தயாரிப்பாளர்களாக களமிறங்கும் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் விமல் மற்றும் ரோபோ சங்கர் கலந்துகொண்டனர்,
விமல் பேசுகையில் இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன் 3 பாடல் உள்ளது மூன்றும் அருமையாக உள்ளது அதிலும் அம்மா பாட்டு சென்டிமென்ட் கலந்து மனதை உருக்கும் பாடலாக உள்ளது, அதுமட்டுமில்லாது விஸ்சுவல்சும் நன்றாக இருந்தது மேலும் மியூசிக் கச்சிதமாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஒரு பாடல் எப்படியோ அதை வைத்து அந்தப்படத்தை முடிவு செய்ய முடியும் இந்த பாடல்களை பார்க்கும்போது படம் அருமையாக இருக்கும். அதேபோல் படமும் அருமையாக இருக்கும் என் நினைக்கிறேன், இதுமட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் உள்ளது போல்.இதில் இயக்குனர் கெவினுக்கு முதல் படம் ஆனால் பார்த்தால் உங்களுக்கு முதல் படம் மாதிரி தெரியாது அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார் எனது பங்காளி மற்றும் களவாணி2 வில்லனுமான துரை சுதாகர் நிலா புரமோட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மற்றும் இணை தயாரிப்பு திருமுருகன், பாலகிருஷ்ணன், விஸ்லின், TN 75 கே கே கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்