தமிழ்சினிமாவில் கொரோனாவின் ஆதிக்கம் எளியத் தொழிலார்களை கடுமையாகப் பாதிக்கப்பட வைத்துள்ளது. எப்போது ஷுட்டிங் ஆரம்பிக்கிறார்களோ அப்போது தான் அவர்களுக்கு விடிவுகாலம். தினமும் சீரியல், சினிமா என ஷுட்டிங் நடைபெற்றால் தான் அவர்களுக்கான வேலை தடையின்றி நடக்கும். அப்படியே ஷுட்டிங் நடைபெற்றாலும் தயாராகும் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் வேண்டும். ஓ.டி.டி நிறுவனங்கள் எல்லாப் படங்களையும் வாங்காது. அதனால் தியேட்டர் திறக்கும் காலம் சினிமாத் தொழிலார்களுக்கு மிக முக்கியமனாது. ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தி வரும் தீவிரத்தைப் பார்த்தால் தியேட்டர்கள் இயங்க செப்டம்பர் அல்லது தீபாவளி ஆகிவிடும் என்கிறார்கள். அடக்கடவுளே!