Tamil Movie Ads News and Videos Portal

”நரகாசுரன் எப்போது வெளியாகும்” – கார்த்திக் நரேன் கேள்வி

தனது முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநராக மாறியவர் இளம் இயக்குநர் “கார்த்திக் நரேன்”. இவர் அப்படத்தைத் தொடர்ந்து, அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்தார். அப்பொழுது கெளதம் வாசுதேவ் மேனன் நிதிப் பிரச்சனைகளில் சிக்கியதால், அவரது படங்களான ‘துருவ நட்சத்திரம், எனை நோக்கிப் பாயும் தோட்டா, நரகாசுரன்’ ஆகிய படங்கள் வெளியாகாமல் முடங்கின. சில தினங்களுக்கு முன்னர் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்கள் எப்பொழுது வெளியாகும் என்று கெளதம் அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பில் ‘நரகாசுரன்’ படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனது படம் நரகாசுரன் பகல் வெளிச்சத்தை காணப் போவது எப்போது சார்..? அது குறித்து தெளிவான விளக்கத்தைச் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். ஆம் அது எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்..” என்று பதிவிட்டுள்ளார்.