Tamil Movie Ads News and Videos Portal

நான் அவளை சந்தித்த போது- விமர்சனம்

“ஓர் உதவி இயக்குநர் இரவெல்லாம் பட்டினி கிடந்தாலும் காலையில் ஏப்பம் விட வேண்டும்” என்று வைரமுத்து சொல்லுவார். அதாவது உதவி இயக்குநர்களின் வாழ்க்கை அத்தனை துயர் மிக்கது. இப்போது உதவி இயக்குநர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகவெளி நிறைய இருக்கிறது. 2000 வரை அப்படியான வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. 1996-ல் தன் வாழ்வில் நடந்த கதையைத் தான் நான் அவளைச் சந்தித்த போது என்ற படமாக தந்திருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

 

நடிகர் சந்தோஷ் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் ஓர் உதவி இயக்குநராக நடித்திருந்தார். அதே கேரக்டர் தான் இந்தப்படத்திலும் காலகட்டம் வேறு அவ்வளவு தான். ஓரளவு தன் நடிப்பிற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சாந்தினி நடிப்பில் ஒரு அப்பாவி பெண்ணைப் பார்க்க முடிகிறது.

ஒரு பெண்ணுக்கு வழி காட்டச் சென்று அவளையே திருமணம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்படும் கனவுகளை சுமந்த கலைஞன் கனவை அடைந்தானா? கணவனாக ஜெயித்தானா என்பதாக கதை விரிகிறது. எந்த

இடத்திலும் படம் தேங்கவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் நம்மை உருக்கி விடுவதும் நிஜம். அந்தவகையில் ரவிசந்தர் ஓர் இயக்குநராக ஜெயித்துள்ளார். பின்னணி இசையை விட பாடல்களில் தான் இசை அமைப்பாளர் முருகவேல் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

கதையில் உள்ள பிரம்மாண்டத்தை காட்சிகள் வழியே கடத்துவதில் ஒருசில தொய்வு இருந்தாலும் வலி கோர்த்து நெய்யப்பட்ட கதைக்கு நியாயம் சேர்ப்பது பார்வையாளர்கள் கடமை. சில சமரசங்கள் செய்துகொண்டு தியேட்டரில் சந்தியுங்கள்

-மு.ஜெகன்சேட்