Tamil Movie Ads News and Videos Portal

“எந்தபால் போட்டாலும் எடப்பாடி சிக்ஸ் அடிக்கிறார்”-அமீர் புகழாரம்

நேற்று நடைபெற்ற மாயநதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசியது தான் ஹைலட். அபி சரவணன், வெண்பா, அப்புக்குட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள மாயநதி படத்தை மருத்துவராக இருந்து இயக்குநராக மாறியுள்ள அசோக் தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் அமீர் பேசியதாவது,

 

“இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு கடந்த ஏழாண்டுகளாக திரைப்பட விருதுகளைக்கூட கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்” என்ற பேசிய இயக்குநர் அமீர் மாயநதி படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்