Tamil Movie Ads News and Videos Portal

பொன்மகள் வந்தாள் படம் என்னாச்சு?

கொரோனா லாக்டவுனால் திரையரங்குகளில் படங்கள் வெளியாக முடியாத சூழல் உள்ளது. அதனால் ஜோதிகா நடித்து சூர்யா தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படத்தை நேரடியாக அமேசானில் ரிலீஸ் செய்யவிருப்பதாகப் பேச்சு வந்தது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எல்லாம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். அதனால் மே-1இல் இணையத்தில் ரிலீஸாக வேண்டிய படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ரசிகர்கள் சிலர் படம் எப்போ வரும்? என்ற கேள்வியோடு இணையத்தில் காத்திருக்கிறார்கள்