விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார், நடிப்பில் 2017ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றத் திரைப்படம் “விக்ரம் வேதா”. இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இதே படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து இயக்க படத்தின் இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி முயன்று வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஒரு காமெடி த்ரில்லர் வெஃப் சீரிஸை அமேசான் ப்ரைமில் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதில் பார்த்திபன் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் ‘விக்ரம் வேதா” ரீமேக் கைவிடப்பட்டதா..? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை என்றும்; அமீர்கான் பிற படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்பதால் தற்போது அப்படம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சில மாதங்கள் கழித்து அப்படமும் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.