நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலிருந்து “நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.சென்னை 3 டிசம்பர் 2020 : Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து அவர்கள் வெளிவருவதை சுவாரசியமாக விவரிக்கும் கதை தான் இது. தொழிலில் பங்குதாரர்களாகவும் இணைபிரியா நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில் நடக்கும் குழப்பங்களே இதன் கதை.
திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தப்பித்து தங்களை தாங்களே கண்டறிவதற்காக கோவாவிற்கு செல்லும் நண்பர்களை, ஒரு கடன் முதலை துரத்த, அதை தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் 8-பகுதிகளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்புராஜால் தயாரிக்கப்பட்டு சாருகேஷ் சேகரின் இயக்கத்தில் நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடையில் பாலாஜி ஜெயராமன் வசனங்களை எழுதியுள்ளார்.
“ட்ரிபிள்ஸ்” தொடர் இணை பிரியா மூன்று உயிர் நண்பர்களின் வாழ்வில் நடக்கும் காமிக்கல் தருணங்களை, அவர்கள் வாழ்வில் வரும் காதல், காபி ஷாப் வைத்து முன்னேற போராடும் அவர்களின் முயற்சி, மறக்கமுடியாத கோவா பயணம் ஆகியவற்றை கலகலப்பான காமெடியுடன் திரையில் கொண்டு வந்துள்ளது. இன்று படக்குழு இத்தொடரின் அழகான காதல் பாடலான “நீ என் கண்ணாடி” பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, இயக்குநர் சாருகேஷ் சேகர் பாடல் வரிகள் எழுதியுள்ளார். முதன்மை கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உறவின் ஆழத்தை சொல்லும் இப்பாடலை கோவிந்த் பிரசாத் மற்றும் சிந்தூரி விஷால் பாடியுள்ளனர்.நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலகலப்புக்கு பஞ்சமில்லா காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது.