இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் .கமலுக்கு ‘ சத்யா’ ரஜினிக்கு ‘பாட்ஷா’ ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று அவரது மைல்கல் படங்களின் பட்டியல் நீளும்.சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, சின்னத்திரை பக்கமும் விட்டுவைக்கவில்லை. சன்,விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில் தொடர்கள் இயக்கியுள்ளார்.குறிப்பாக சன் டிவிக்கு இவர் இயக்கிய ‘மகாபாரதம்’ ஒரு உதாரணம்.
இப்போது வெப் சீரீஸ் தனத்தில் இறங்கி இருக்கிறார். இயக்குநராக அல்ல ஒரு தயாரிப்பாளராக ,புதிய முகத்தோடு காலடி எடுத்து வைத்திருக்கிறார். தனது :சுரேஷ் கிருஷ்ணா புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் ‘சார்பில் ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவர், இப்போது வெப் சீரீஸ் ஒன்றைத் தயாரித்துள்ளார் .’இன் த நேம் ஆப் காட் ‘என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் உருவாகி இருக்கிறது.அதாவது ‘கடவுளின் பெயரால்’ என்ற பொருளில் தலைப்பு உள்ளது.பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இதை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாசாகர் முத்துக்குமார்.