சொல்லும் கருத்தை வொர்த்தாகச் சொன்னால் அந்தப்படம் கவனிக்கப்படும். வெப் சொல்லும் கருத்து வொர்த்தாக இருக்கிறதா?
சட்டர்டே வந்தாலே பார்ட்டி என சுத்தும் சில ஐடி கேர்ள்ஸ். அவர்களை கடத்தும் ஒரு விரக்தியான மனிதன். அந்தப்பெண்களை அவன் கடத்துவதற்கான காரணம் என்ன? கடத்தப்பட்ட பெண்கள் என்னவானார்கள்? என்பதே வெப் படத்தின் கதை
ஹீரோவாக நட்டி. விரக்தி, கொடூரம், ஆதங்கம்,அன்பு, அக்கறை என படத்தில் அவர் காட்டியிருப்பது பலமுகம். அனைத்துமே சிறப்பு. ஷில்பா மஞ்சுநாத் கொடுத்த வேலைக்கு குறைவின்றி நடித்துள்ளார். அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபபிரியா மலர், மொட்டை ராஜேந்திரன் என படத்தில் தோன்றிய அனைவரும் ஸ்கோர் செய்துள்ளனர்
பாடல்களில் ஓரளவு இசையை இட்டு நிரப்பி ஒப்பேற்றியிருக்கும் கார்த்திக் ராஜா பின்னணி இசையில் இன்னும் கெத்து காட்டியிருக்கலாம். மேலும் நிறைய இன்ஸ்ட்ரூமெண்ட்கள் லைவ் ஆக இல்லை என்பது வருத்தமான தகவல். ஒளிப்பதிவில் கிறிஸ்டோபர் ஜோசப் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்துள்ளார். அவரின் முயற்சியும் உழைப்பும் படமெங்கும் தெரிகிறது.
அறிமுக இயக்குநர் ஹாரூண் முன்பாதியில் திரைக்கதையை மெதுவாக நகர்த்தியிருந்தாலும் பின்பாதியில் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது. வாழ்த்துகள் இயக்குநரே! முதல் படம் வெறும் கல்லா கட்டினால் போதும் என கண்டதையும் எடுக்காமல் சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ்-ஐ அழகான நரேட்டிங்கில் கொடுத்துள்ள இயக்குநர் ஹாரூணுக்கு மீண்டும் ஒரு ஹார்ட்டீன்❤️
வெப்-பாசிட்டிவ் வைப்
3/5
-தமிழ் வெண்பா