நடிகை அனுஷ்கா தனது முக நூல் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஒரு புதிய கண்ணோட்டம். நாம் சாத்தியம் என்று நினைத்த அனைத்தும் சாத்தியமற்றதாகி, சாத்தியமற்றது என்று நினைத்த அனைத்தும் சாத்தியம் ஆகி இருக்கிறது. உண்மையைப் பார்க்க ஒரு கணம். முழுமையாக சுவாசிக்க ஒரு கணம். நாம் பூளோக ரீதியாகவும் காலத்தினாலும் பிரிந்து இருந்தாலும், அன்பாலும், பிரார்த்தனைகளினாலும் அக்கறையினாலும் இணைந்து இருக்கிறோம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருடனும்.
நம்மைப் பாதுகாக்க; நம்மீது அக்கறை செலுத்தும், நமக்காக பிரார்த்தனை செய்யும், நமக்காக வேலை செய்யும், நமக்காக உதவி செய்யும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இந்த சூழலில் இருந்து நாம் வெளியே வரும் போது, நாம் ஒவ்வொரு மனிதருக்கும் கடமைப்பட்டவர்களாகி இருப்போம். வெவ்வேறு சமயத்தில். வெவ்வேறு நேரங்களில் நாம் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதினை உணர வேண்டும். இந்த உலகத்தில் யாரும் பெரியவரும் இல்லை; யாரும் சிறியவரும் இல்லை; நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் பாத்திரம் அவ்வளவே. நம் பூமியின் மனிதத்தன்மைக்காக மனிதநேயத்திற்காக செயலாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.