நடிகர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. படம் தொடங்குவதற்கு முன்னர் சிம்புவின் நடவடிக்கைகள் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்து, அவை எல்லாம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டப் பின்னர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் சிம்பு கேக் வெட்டினார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, “என் சகோதரர் சிம்புவிற்கு இந்தப் பிறந்தநாள் பல மாற்றங்களை அவரது வாழ்வில் கொண்டு வரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவரைப் பார்க்கும் போது அவருக்குள் இருக்கும் ஃபயர் மற்றும் ஃப்ரெஷ்னஸ் ஆகியவற்றை என்னால் உணர முடிகிறது. அவரின் அப்துல் காதர் கதாபாத்திரத்தை ரசிகர்களான உங்களிடம் வெளியிடுவதற்காக நான் பொறுமையின்றி காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.