Tamil Movie Ads News and Videos Portal

விஷமக்காரன்- விமர்சனம்

தமிழ்சினிமா நெடுங்காலமாக பார்த்து வரும் முக்கோண காதலை அடிப்படையாக கொண்ட படம் தான் விஷமக்காரன்

படத்தின் நாயகன் வி தான் இப்படத்தின் இயக்குநர். முதல் அடி என்பதால் மிகக்கவனமாக எடுத்து வைத்துள்ளார். கதையை நகர்த்துவதில் ஒரு மெச்சூட் தன்மையை கடைபிடித்துள்ளார்..

கதை?

நாயகன் வி ஒரு லைப் கோச்சர். அதாவது வாழ்வின் இடர்களை மன ரீதியாக சந்திக்க சிரமப்படுபவர்களுக்கு வழி காட்டுபவர். அவருக்கு காதலியாக வருகிறார் அனிக்கா விக்ரமன். அனிக்கா விக்ரமனிடம் வி தனக்கு சைதன்யா ரெட்டி என்ற பெண்ணோடு காதல் இருந்ததைச் சொல்கிறார். ஒரு மன வேறுபாட்டில் வியும் சைதன்யா ரெட்டியும் பிரிந்ததைச் சொல்லும் வி அனிக்கா விக்ரமனை திருமணம் முடிக்கிறார். இந்த நிலையில் வி அனிக்கா விக்ரமன் வாழ்வில் மறுபடியும் சைதன்யா ரெட்டி வருகிறார். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே விஷமக்காரனின் கதை

வி கூடுமானவரை எதார்த்தமாக நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் தேறிவிடுவார் என நம்புவோம். அனிக்கா விக்ரமன், சைதன்யா ரெட்டி இருவரும் அழகாக இருக்கிறார்கள். இருவருமே ஆவ்ரேஜான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தில் இவர்கள் கேரக்டர்களை இன்னும் அழுத்தமாக வடிமைத்திருக்கலாம்

படத்தில் மொத்தம் வி, அனிக்கா விக்ரமன், சைதன்யா ரெட்டி மூன்றே கேரக்டர்கள் தான் என்பதால் படம் ஒரே இடத்தில் சுருங்கி விடுகிறது. திரைக்கதையில் பரபரப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவறவிட்டுள்ளார் இயக்குநர் வி

படத்தின் பின்னணி இசை பாடல்கள் இரண்டும் படத்தை அடுத்தக்கட்ட நகர்த்தியிருக்கலாம். ஒளிப்பதிவு ஓரளவு பராவாயில்லை

முக்கோண காதல்கதையில் எத்தனையோ சுவராஸ்யங்களைச் சொல்லும் படங்கள் வந்துவிட்டன. அவற்றோடு ஒப்பிடும் போது விஷமக்காரன் இன்னும் விசயக்காரனாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

-மு.ஜெகன் கவிராஜ்