விஷாலுக்கு வில்லனாவாரா ஆர்யா..!??
விஷால் சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூனின் கேரக்டர் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் அக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் படக்குழு ஆர்யாவைத் தான் அணுகியது. அவர் நடிக்க மறுக்கவே அந்த வாய்ப்பு அர்ஜூனுக்கு சென்றது. தற்போது மீண்டும் விஷாலுக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு ஆர்யாவிடம் சென்று இருக்கிறது. இதனை ஏற்பாரா..? இல்லை மீண்டும் மறுப்பாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படம் இரண்டு நாயகர்களின் கதையாம். அதில் ஒருவர் நல்லவர்; மற்றொருவர் கெட்டவராம். இருவருக்குமான மோதலும் முடிவும்தான் மொத்த படமுமாம். இதில் ரீத்து வர்மா விஷாலுக்கு நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றொரு நாயகனாக நடிக்க ஆர்யாவை அணுகியிருக்கும் படக்குழுவினர், அவருக்கான ஹீரோயினை இன்னும் முடிவு செய்யவில்லையாம். இது குறித்த மேலதீக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.