ஒருபடி இறங்கி வந்தா நூறுபடி ஏறி வரும் விருமனுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்?
ஆரம்பிக்கலாங்களா?
தவறான அப்பாவிற்கும் சரியான மகனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் விருமனின் கதை
ஜன்னல் காத்துல கூட மின்னலை புகுத்துற மாதிரி fire ah இருக்கிறார் கார்த்தி. சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள், ஒருசில காமெடிகாட்சிகள் என எல்லா ஏரியாவிலும் நல்லா ஆடியிருக்கிறார் கார்த்தி. அவருக்குச் சரிசமானமாய் பிரகாஷ்ராஜ் பிரகாசிக்கிறார். அறிமுக நாயகி அதிதி சங்கர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக டான்ஸில் கார்த்தியை விட ஸ்கோர் செய்துள்ளார். சூரி காமெடி சில இடங்களில் நன்றாக எடுபட்டுள்ளது. வடிவக்கரசி, இளவரசு, மனோஜ் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்
யுவன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக கஞ்சாப் பூ கண்ணால பாட்டுக்கு தியேட்டரில் ஆரவாரம் நடக்கிறது. ஒளிப்பதிவு மதுரை தேனி ஏரியாவை அழகுபடுத்தி காட்டியுள்ளது
அப்பா மகன் கதை என்பதால் படம் துவங்கும் போதே நமக்கு முடிவு தெரிந்து விடுகிறது. விட்டு விட்டு கனெக்ட் ஆகும் எமோஷ்னலும் சின்ன குறைபாடு தான். ஆனாலும் உறவுகளின் மேன்மை உயர்த்தியும் உணர்த்தியும் சொல்லும் படங்கள் வருவது காலத்தின் தேவை. அதை நச்சென பதிவு செய்திருப்பதால் விருமன் விருப்பமானவனாக இருக்கிறான்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்