Tamil Movie Ads News and Videos Portal

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’!

 

‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையானமுறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின்கதையை  உணர்ந்துகொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன்உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்குகாண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்
தம்பி இராமையாஅவர்கள், ‘இந்த கதை அனைத்துமக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலைமுடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.

முனிஸ்காந்த்அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார். சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாகவிரும்புவார்கள். இது ஒரு குடும்பபொழுதுபோக்காக இருக்கும். இந்தபடத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனதுகுடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும்என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’.இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில்மிக்க மகிழ்ச்சி” என்றார்.ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.