மகனின் பறக்கும் ஆசையை நடக்கவே சிரமப்படும் தந்தை நிறைவேற்றப் போராடும் கதை
ஒருகால் ஊனத்தோடு கஷ்ட ஜீவனம் நடத்துபவர் சமுத்திரக்கனி..அவருக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனுக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெருங்கனவு. அந்தக் கனவை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டிய ஒரு சங்கட சூழல் வருகிறது. அந்தச் சூழலை சமுத்திரக்கனி எப்படி கடந்தார் என்பதே படத்தின் கதை
செண்டிமெண்ட் என்று சொல்லும் முன்பாகவே கண்களைப் ஈரமாக்கத் தயாராகும் சமுத்திரக்கனி இந்தப்படத்தில் கூடுதல் எபெக்ட் கொடுத்து கண்களை கசக்கியுள்ளார். துருவனாக நடித்துள்ள சிறுவன் நன்றாக நடித்துள்ளான். சிற்சில இடங்களில் கண்களில் நீர் கசியும் நடிப்பை வழங்கியதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருப்பது துருவனின் நடிப்பே. அனுசயா கேரக்டருக்கான ரைட்டிங்கும் அவரது ஆக்டிங்கும் கிரிஞ் வகை.
ஆட்டோ டிரைவர் கேரக்டர் நச் ரகம்
பின்னணி இசையை விட அப்பா மகன் பாசம் பற்றிய ஒருபாடல் நன்றாக கவனம் ஈர்க்கிறது. ஒளிப்பதிவில் பெரியளவில் நேர்த்தி ஏதுமில்லை. விமான காட்சிகளில் வரைகலை பெரிதும் சொதப்பியுள்ளது
நல்ல உணர்வுப்பூர்வமான கதை தான் என்றாலும் நாடகபாணிலான மேக்கிங்கும் ஆக்டிங்கும் படத்தின் பெருங்குறை. அப்பா மகன் செண்டிமெண்ட் ஒன்றே படம் பார்க்க போதுமானது என்று நினைத்தீர்களேயானால் இது உங்களுக்கானப் படம் தான்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#VIMANAM #விமானம்