ஒரு படத்தைப் பார்த்து முடித்த பின் ஆஹா இவ்வளவு மெனக்கெட்டிருக்கார்களே என்று தோன்றினால் அது sure hit. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றினால் அது டிஸப்பாயிண்ட்மெண்ட் ரகம். விக்ராந்த் ரோணா இரண்டாம் நிலையை எட்டியுள்ளது
கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியே கொலை செய்யப்படுகிறார். இதை விசாரித்து தீயோரை களையெடுக்க வருகிறார் கிச்சா சுதீப். இதுதான் படத்தின் ஆதாரலைன்
கிச்சா சுதீப் தான் படத்தின் மொத்தபலமும். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது மேனரிசங்கள் படத்தை அளவாக ரசிக்க வைக்கிறது. கூடுமானவரை ஏனைய நடிகர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள்
இருள் கவியும் காட்சிகள் தான் படமெங்கும். அதை கச்சிதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசை துரும்பிற்கும் படத்திற்கு சப்போர்ட் செய்யவில்லை
பான் இண்டியா படம் என்ற போதை இப்போது பலரையும் தாக்கியுள்ளது. அந்தப்போதை நல்லது தான். ஆனால் அதற்காக நிறைய உழைக்க வேண்டும். ஒரு மாநில ரசனையை மட்டும் கவனமெடுக்காமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ரசனையை கணக்கில் எடுக்க வேண்டும். முக்கியமாக திரைக்கதை எழுத்தில் ஆழம் இருக்கவேண்டும். விக்ராந்த் ரோணாவில் வேகம் இருந்த அளவிற்கு ஆழமில்லை. இருந்தாலும் கிச்சா சுதீப் ஆட்டிட்யூட்க்காக ஒருமுறை பார்க்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்