Tamil Movie Ads News and Videos Portal

விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரஸ்மீட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னை ஹையாத் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் மிக சுவாரஸ்யமாக பதில்களை அளித்தார். விக்ரம் படம் பற்றி கமல் பேசிய பாசிட்டிவ் வார்த்தைகள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜை இன்னும் 30 வருடங்கள் கழித்து சிலர் ரோல்மாடலாக எடுத்து சினிமாவிற்கு வருவார்கள் என்ற தொனியில் கமல் பேசிய பேச்சு விக்ரம் படம் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடையே பரவலாக தூண்டியிருக்கிறது. வருகிற ஜுன் 3-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் விக்ரம் படத்திற்கு கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வெயிட்டிங்