‘டிமாண்டி காலணி’ ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் படத்திற்கு “கோப்ரா” என்று பெயர் சூட்டியுள்ளனர். த்ரில்லர் வகை கதைக்களத்தில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் 12 வேடங்களில் நடித்து வருகிறாராம்.
இதுவரை அதிகபட்சமாக கமல்ஹாசன் தான் இயக்கி நடித்த தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து இருந்தார். அதற்கு முன்னர் நடிகர் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோப்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 14ல் வெளியாகவிருக்கிறது.