“பிகில்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில்
விஜய், சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெறவிருக்கிறது. இங்கு விஜயுடன் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன. ஏற்கனவே விஜய் ஷிமோகா சென்றுவிட்டார். இன்னும் சில நாட்களில் விஜய் சேதுபதியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.