காதல் படங்களுக்கும் கெளதம் மேனனுக்கும் பெரிய தொடர்புண்டு. அதனால் அவர் காதல் படங்களை எப்போதும் கொண்டாடுவார். தற்போது அவர் ஓ மை கடவுளே எனும் காதல் சார்ந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்த ப் பட்ட செய்தியாக வந்துள்ளது
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது