பிரபாஸ், மகேஷ்பாபு, நானி போன்ற தெலுங்கு நடிகர்கள் தமிழிலும் சாதித்ததைப் போல் தாங்களும் தமிழ் மொழியில் நடித்து வெற்றிபெற வேண்டும் என்கின்ற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா தெலுங்கு நடிகர்களுக்கும் இருக்கிறது. பலரும் அதற்கான வாய்ப்புகளுக்காகவே காத்திருக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் “புஷ்பா” படத்தினை தமிழில் காலூன்ற தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறார்.
புஷ்பா திரைப்படம் சில ஆண்டுகள் முன்பு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராக நடிக்கிறார். நம்மூர் விஜய் சேதுபதி இப்படத்தில் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார். இருப்பினும் அவர் இப்படத்தில் வில்லன் இல்லை என்று படக்குழு கூறுகிறது. வில்லனாக நடிக்க சுனில் ஷெட்டி, சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப் போன்ற பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறார் படத்தின் இயக்குநர் சுகுமார்.