மஞ்சு வாரியருடன் இணையும் விஜய் சேதுபதி
அசுரன் படத்தின் மூலம் மலையாள உலகில் வெற்றி பெற்ற நடிகையாகத் திகழும் மஞ்சு வாரியர் தமிழ் படவுலகிற்கு அறிமுகமானார். அது போலவே இந்தாண்டில் ‘மார்கோனி மத்தாய்’ என்ற மலையாளப் படத்தின் மூலமாக விஜய் சேதுபதி மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது மஞ்சு வாரியர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்று மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதில் மற்றொரு கதாநாயகனாக பிஜூமேனன் நடிக்கிறார். இப்படத்தை மஞ்சுவாரியர் நடித்த C/O சாய்ராபானு படத்தில் கதையாசிரியராக பணியாற்றிய ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்புப் பணிகளிலும் தன்னை ஒருவராக மஞ்சு வாரியர் இணைத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.