தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் பேர் போன நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோவாக வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர வேடத்தில், வயதான வேடத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் என பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவரின் தோற்றம் பெரும்பாலும் எல்லாப் படங்களிலுமே ஒரே மாதிரி தான் இருக்கும். தற்போது முதன்முறையாக தன் உடல் எடையில் 25 கிலோ எடையினை ஒரு படத்தில் நடிப்பதற்காக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஜய் சேதுபதி.
இது ஹிந்தியில் முதன்முறையாக அமீர்கான் நடிப்பில் உருவாகும் லால் சிங் சத்தா படத்திற்காகவாம். இப்படத்தில் விஜய் சேதுபதி அமீர்கானுடன் மிலிட்டரில் இணைந்து பணிபுரிபவராக நடிக்கிறார். எனவே தோற்றம் அக்கதாபாத்திரத்திற்கு பொருந்த வேண்டும் என்று தன்னை முதன்முறையாக ஸ்லிம் அன்ட் பிட்டாக பழைய தோற்றத்தில் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.