நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
மக்களிடையே பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
கிருமி நாசினியை கட்டுப்படுத்தும் சானிடைசிங் மற்று முகக் கவசம் இலவசமாக பொதுமக்களுக்கு நற்பணி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்!