நடிகர் கமல்ஹாசனும் நடிகர் விஜய்சேதுபதியும் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உரையாடினார்கள். அப்போது விஜய்சேதுபதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கமல் மிக எதார்த்தமாகப் பதில் அளித்தார். இந்தப்பேட்டியின் பின்னால் ஒரு செய்தி இருப்பதாகத் தெரிகிறது. அதாவது கமல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பதே அச்செய்தி. “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தை கமல் தானே இயக்கி நடிக்க இருந்தார். தற்போது அந்தப்படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் கமல் இருப்பதாகத் தெரிகிறது.