விஜய் ரசிகர்களின் சண்டையை நிறுத்திய டுவிட்
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் அடித்துக் கொள்வது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக விஜய் ரசிகர்கள், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் இரண்டொரு நாளாக மோதி வந்தனர். இந்த மோதலுக்கு காரணம் யார் மிகச் சிறந்த டான்ஸர் என்பது தான். தளபதி விஜயைப் போலவே தெலுங்கில் நடிகர் என்.டி.ஆரும் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். இதனால் இருவரில் யார் மிகச்சிறந்த டான்ஸர் என்பதில் சண்டை தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று இந்த சண்டை நின்று போனதோடு, இரு நடிகர்களின் ரசிகர்களும் தோழா, நண்பா என்று கொஞ்சிக் குழாவத் தொடங்கினர். இதன் பின்னணி என்ன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. பிகில் படத்தை தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியிட்ட விநியோகஸ்தர் மகேஷ் எஸ்.கொனரா வெளியிட்ட ஒரு டுவிட் தான் இதற்கு காரணம் ஆகும். அவர் தனது டிவிட்டர் செய்தியில், விஜயை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் படத்தை தெலுங்கில் சிறப்பான முறையில் வெளியிட்டு வெற்றியடையச் செய்ததற்கு விஜய் வாழ்த்துத் தெரிவித்தார். அதைவிட முக்கியமான விசயம் விஜயும் ஜூனியர் என்.டி.ஆரும் போனில் பேசிக் கொண்டனர். அப்போது தெலுங்கு ரசிகர்கள் தனது படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அளித்ததாக கூறி ஜூனியர் என்.டி.ஆரிடம் விஜய் நன்றி தெரிவித்திருந்தார். என்பது தான் அந்த டிவிட்.