கடந்த தினம் முழுக்க பெரும்பாலான இந்தியர்கள் தங்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்டிருந்தாலும் தங்களுக்கு நெருக்கமான பிரபலங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களிடம் இருந்து ஏதாவது அப்டேட் வந்திருக்கிறதா..? என்றும் தேடத் தவறவில்லை. அப்படி தேடிக் கொண்டிருப்பவரகளுக்குத் தான் இந்த அப்டேட்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் விஜய் அடுத்து ‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சுதா சொல்லிய கதை விஜய்க்கு திருப்தியளிக்கவில்லையாம். இதனால் அதே கதையை சில மாற்றங்கள் செய்து, தல அஜீத்திடம் கூற முயன்று வருகிறாராம் சுதா. இதற்காக அஜீத்திடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கிவிட்டாராம். இந்தக் கதையை அஜீத் ஓகே செய்யும்பட்சத்தில் ‘வலிமை’ படத்தினைத் தொடர்ந்து அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.