Tamil Movie Ads News and Videos Portal

4-வது முறையாக விஜய் – முருகதாஸ் கூட்டணி..!!??

- Advertisement -

தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்து தளபதி விஜய் யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சர்கார், பிகில் போன்ற படங்கள் வசூலில் பிரமிப்பை ஏற்படுத்தியதால், தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட அவரது அடுத்த படத்தை

இயக்கவிருப்பது யார் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் வெற்றிமாறன், மோகன் ராஜா ஆகியோர் விஜய்க்கு கதை சொல்லி இருக்கும் நிலையில் மீண்டும் முருகதாஸ் விஜய் கூட்டணி இணைவதற்கே சாத்தியம் அதிகம் இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘துப்பாக்கி’ ‘கத்தி’ ‘சர்கார்’ என இவர்கள் கூட்டணியில் உருவான அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றிருப்பதால், ஒரு வேளை 4ம் முறையாக இவர்கள் இருவரும் இணைந்தால், இப்படத்திற்கும் நல்ல வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.