Tamil Movie Ads News and Videos Portal

கன்னடப்படம் இயக்கும் விஜய் மில்டன்

‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குநராக மாறினார். அப்படம் வணிகரீதியாக வெற்றி பெறாததால் தொடர்ந்து படங்கள் இயக்காமல் இருந்து வந்த மில்டன், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கோலிசோடா படத்தை இயக்கினார்.அப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அதனைத் தொடர்ந்து, கடுகு, பத்து எண்றதுக்குள்ள, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கினார்.

இப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதனால் மீண்டும் ஒளிப்பதிவின் பக்கம் கவனத்தை திருப்பினார். தற்போது துருவ் சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘பொகரு’ கன்னட படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். படப்பிடிப்பின் இடைவெளியில் கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமாரை சந்தித்து ஒரு கதையினைக் கூற, கதையில் இம்ப்ரெஸ் ஆன சிவராஜ்குமார் அப்படத்தை தானே தயாரிக்கிறேன் என்று முன்வர.. கன்னடத்தில் முதல்படம் இயக்கும் வாய்ப்பு, தற்போது விஜய் மில்டனுக்கு கணிந்திருக்கிறது.